கொரோனா பெரிய நோயல்ல, தடிமனைப் போன்றது: முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தெரிவிப்பு

🕔 March 19, 2020

– முன்ஸிப் –

கொரோனா வைரஸ் தாக்கம் என்பது பெரியதொரு நோயல்ல” என்று, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்துள்ளார்.

“அது தடிமனைப் போன்றதொரு நோய்தான்” எனவும் அவர் கூறியுள்ளார்.

பொதுத் தேர்தலில் தேசிய காங்கிரஸில் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவோரின் வேட்புமனுவை இன்று வியாழக்கிழமை அம்பாறை கச்சேரியில் சமர்ப்பித்த பின்னர், ஊடகங்களிடம் பேசிய போதே அவர் இந்த விடயங்களைக் கூறினார்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் போது, தடிமலை விடவும் இலகுவானதொரு நோயாக இது மாறிவிடும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

03 மாதங்கள் ஆவதற்குள் உலகளவில் 8,967 மரணங்களை (வியாழக்கிழமை பிற்பகல் 5.35 மணி வரை) ஏற்படுத்தியிருக்கும் – மிகவும் அச்சுறுத்லான ஒரு நோயை, ‘தடிமனைப் போன்றதொரு நோய்’ என, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா கூறியுள்ளமையானது சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோய் பற்றிய விழிப்புணர்வினை உலக நாடுகளும், இலங்கை அரசாங்கமும் உச்ச அளவுகளில் ஏற்படுத்தி வரும் இன்றைய காலகட்டத்தில், கொரோனா நோய் பற்றிய விழிப்புணர்வினை மழுங்கடிக்கும் வகையில் அதாஉல்லாவின் மேற்படி கருத்து அமைந்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது.

வீடியோ

Comments