கொழும்பு, புத்தளம் மாவட்டங்களிலும் தென் மாகாணத்திலும் கொரோனா அபாயம் அதிகமுள்ளதாக எச்சரிக்கை

🕔 March 17, 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு 88 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்காக பொலன்னறுவையில் விசேட பிரிவொன்றை ஸ்தாபித்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் சேவைகள் இன்று (17) முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் உயிரிழப்புக்கள் தொடர்பான கேள்விகள் மற்றும் உயிரிழப்புக்கள் தொடர்பான ஆவணங்களுக்கான உதவி சேவைகள் மாத்திரம் செயற்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை புத்தளம், கொழும்பு மாவட்டங்களிலும், தென் மாகாணத்திலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் அதிகளவில் காணப்படுவதாக பொது சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று நள்ளிரவு முதல் உடன் அமலுக்கு வரும் வகையில் கட்டார், பஹ்ரைன் மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்குள் பயணிகளுக்கு வருகைத் தர அனுமதிக்கப்பட மாட்டாது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை 185.08 ரூபா என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டாலாருக்கு எதிராக இலங்கை ரூபா கடந்த 13ஆம் தேதி தரவுகளின் பிரகாரம், 182.82 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்