ரஞ்சனுக்குப் பிணை வழங்கி, நீதிமன்றம் உத்தரவு

🕔 February 26, 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் விடுவிக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டு 15ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆயினும், வெளிநாடு செல்வதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினுடையவை எனக் கூறப்பட்டு ஊடகங்களில் வெளியன சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்புகளுடன், அவருடைய குரல் ஒத்துபோவதாக அரசாங்க ரசாயன பகுப்பாய்வாளர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: ரஞ்சன் ராமநாயக்கவை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்