நாடாளுமன்றத் தேர்தல் காலத்தை அறிவித்தார் மஹிந்த தேசப்பிரிய

🕔 February 26, 2020

நாடாளுமன்றத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதிக்கும் மே 04ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் கூறினார்.

தேர்தலை நடத்துவதற்கான திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிக்கே உள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.

மார்ச் 02ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைக்கவுள்ளதாக ஏற்கனவே அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments