கட்சிகளின் சின்னத்தை எப்போது மாற்றலாம்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கம்

🕔 February 25, 2020

ரசியல் கட்சிகளின் சின்னத்தை மாற்றுவதாயின், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஒரு வார காலப்பகுதியில் மாத்திரமே அதனைச் செய்ய முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் ஒளிரப்பான அரசியல் நிகழ்ச்சியில் நேற்று திங்கட்கிழமை இரவு கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

“தற்போது பல அரசியல் கட்சிகள் சின்னத்தை மாற்றுவது தொடர்பான பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளன.

எனினும்இ இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அலட்டிக் கொள்ளப் போவதில்லை.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஒரு வார காலப்பகுதியில் மாத்திரமே அரசியல் கட்சிகளின் சின்னத்தை மாற்ற முடியும்” என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்