சஹ்ரான் கும்பலை ஒழித்துக்கட்ட உதவிய சாய்ந்தமருது கிராம உத்தியோகத்தருக்கு, பிரதமர் கௌரவம்

🕔 February 21, 2020

– நூருல் ஹுதா உமர் –

சாய்ந்தமருதில் மறைந்திருந்த சஹ்ரானின் கும்பலை ஒழிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கிய கிராம உத்தியோகத்தர் எம்.எம்.மாஹிர், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களால் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

கண்டியில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் மாநாட்டில், மேற்படி கிராம உத்தியோகர்தலை அமைச்சர்கள், அரச உயரதிகாரிகள் முன்னிலையில் பிரதமர் கௌரவித்தார்.

சாய்ந்தமருதில் மறைந்திருந்த சஹ்ரானின் பயங்கரவாதக் குழுவினரை ஒழிப்பதற்காக, தனது உயிரைக் கூட பொருட்டில் கொள்ளாது கிராம உத்தியோகத்தர் மாஹிர் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருதில் மறைந்திருந்த சஹ்ரானின் பயங்கரவாதக் கும்பலை ஒழித்துக் கட்டுவதில் தொடர்புபட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளமை குற-ிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்