ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

🕔 February 17, 2020

நாடாளுமன்றம் மார்ச் மாதம் 02ஆம் திகதி கலைக்கப்பட்டால், ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் மார்ச் மாதம் கலைக்கப்பட்டால், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு உசிதமான காலப்பகுதியை அறிவிக்குமாறு கோரி, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு – ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதத்திலேயே, தேர்தல் நடத்த சாத்தியமான திகதி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 30ம் திகதி பொதுத் தேர்தலை நடத்தினால், மே மாதம் முதலாம் திகதியன்று சர்வதேச தொழிலாளர் தினம் என்பதால், அன்று பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றும், விசாகப்பூரணை காரணமாக மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடத்த முடியாது என்றும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்