மக்கள் நடமாடும் இடத்தில் மின் கசிவு; மின்சார சபையின் கல்முனை அலுவலகத்தினர் அலட்சியம்

🕔 February 16, 2020

பாறுக் ஷிஹான்

ல்முனை சிங்கள மகாவித்தியாத்திற்கு அண்மித்த சந்தி ஒன்றிலே மின்கம்பத்துடன் இணைந்த மின்பிறப்பாக்கி (டிரான்ஸ்போமர்) மேலாகச் செல்லும் மின்கம்பிகளில் அபாயகரமாக மின்கசிவு ஏற்பட்டுள்ள போதும், அதனை மின்சார சபையினர் கவனத்திற் கொள்ளவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கல்முனை மின் பொறியலாளர் பிரிவுக்குட்பட்ட இடத்தில் இந்த மின் கசிவு கடந்த 4 நாட்களிற்கு மேலாக ஏற்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக மக்கள் அச்சம் கொண்டுள்ளபோதும், இலங்கை மின்சார சபையினர் அலட்சியத்தன்மையுடனேயே நடந்து வருகின்றனர்.

மக்கள் நடமாடும் இஸ்லாமபாத் மற்றும் கல்முனை சிங்கள மகாவித்தியாத்திற்கு அண்மித்த சந்தி ஒன்றிலே இந்த மின் கசிவு ஏற்பட்டுள்ளது.

இரவு வேளையில் தொடரும் இம்மின்கசிவு காரணமாக அவ்வீதியால் பயணம் செய்யும் மக்கள் அச்சப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.

எனவே இவ்விடயத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்