இலங்கையில் 1.06 மில்லியன் பேர், தினமும் மது அருந்துகின்றனர்

🕔 February 8, 2020

லங்கையில் 03 மில்லியனுக்கும்அதிகமானோர் மது அருந்துகின்றனர் என்று, 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பொன்று தெரிவிக்கின்றது.

இவர்களில் 1.06 மில்லியன் பேர் தினமும் மது அருந்துவதாக, அந்தக் கணக்கெடுப்பு கூறுகின்றது.

தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை, போதைப்பொருள் தடுப்புக்கான ஜனாதிபதியின் படையணி மற்றும் பொலிஸார் இணைந்து, மேற்படி கணக்கெடுப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மது அருந்தும் மொத்தத் தொகையினரில் 906 பெண்களும், 121,170 ஆண்களும் 18 வயதுக்குக் குறைந்தவர்களாவர்.

Comments