சீன உணவுப் பொருட்களுக்கு, காத்தான்குடியில் கதவடைப்பு

🕔 February 7, 2020

– அஹமட் –

சிறுவர்களுக்கான சீன உணவுப் பொருட்களை காத்தான்குடியில் விற்பனை செய்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகர சபையும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

சீனப் பொருட்களை இறக்குமதி செய்வோர் இதற்கான ஆதரவை காத்தான்குடியில் வழங்கியுள்ளனர் என, காத்தான்குடி ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்த முடிவை காத்தான்குடி எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்