பொதுத் தேர்தலில் நான், மாகாண சபைத் தேர்தலில் உதுமாலெப்பை போட்டி; கட்சி மாறப் போவதாக வரும் செய்திகள் கட்டுக்கதைகள்: நஸீர் எம்.பி

🕔 February 3, 2020

திர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து அல்லது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்டாலும், தனது ஆதரவாளர்களின் கோரிக்கையின் நிமிர்த்தம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் ஆசீர்வாதத்துடன் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக, முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான மத்திய குழுக் கூட்டம் அண்மையில் அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

“பொதுத் தேர்தலுக்கு முன்னர் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்
நடைபெறுமானால், மாகாண சபைத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். அத் தேர்தலில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை அட்டாளைச்சேனை சார்பாகப் போட்டியிடுவார்” என்றும் நஸீர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தான் கட்சி மாறப் போவதாக சமூக வலைத்தங்களிலும், இணையத்தளங்களிலும் வரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

(செய்தி மூலம்: நாாடாளுமன்ற உறுப்பினரின் பேஸ்புக் பக்கம்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்