ஜேர்மனில் துப்பாக்கிச் சூடு: 06 பேர் பலி

🕔 January 24, 2020

ஜேர்மனில் நடந்த துப்பாக்கி சூட்டில் 06 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு ஜேர்மன் நகரமான ‘ரொட் அம் சீ’ பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலின் பின்னர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு கட்டடத்தில், சந்தேகநபர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஆரம்ப விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரை தவிர்த்து துப்பாக்கிச் சூட்டில் வேறு யாரும் ஈடுபட்டதாக எந்த ஆதாரமும் இல்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் சந்தேக நபரின் குடும்ப உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments