ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

🕔 January 14, 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசியக் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சி இந்த தீ்ர்மானத்தை எடுத்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியினுடாக கிடைக்கப்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த தீர்மானத்திற்கு கட்சியின் செயற்குழுவும் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்