இந்தோனேசிய விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாகத் தரையிறக்கம்: பயணிகள் இருவர் மரணம்:

🕔 January 13, 2020

ட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கட்கிழமை காலை, அவசரமாகத் தரையிரங்கிய பயணிகள் விமானமொன்றிலிருந்து, இரண்டு சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

இந்தோனேசியாவின் தாய் எயார்வேஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான லயன் எயார் எனும் விமானமே இவ்வாறு தரையிறங்கியது.

குறித்த விமானத்திலிருந்து இந்தோனேஷிய பிரஜைகளான 64 வயது ஆண் மற்றும் 74 வயது பெண் ஆகியோரின் சடலங்கள் வைத்தியசலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

சம்பந்தப்பட் இருவரும் திடீரென நோய்வாய்ப்பட்டதன் காரணமாக குறித்த விமானம் அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இந்த விமானம் சஊதி அரேபியாவின் ஜித்தா நகரிலிருந்து இந்தோனேசியாவின் சுரவயா எனும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோதே, இடையில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இரண்டு சடலங்களும் மரண விசாரணையின் பின்னர் இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, கொழும்பிலுள்ள இந்தோனேசியா தூதரகம் தெரிவித்துள்ளது.

Comments