ரூபவாஹினிக்கு சஜித் 150 மில்லியன் ரூபா கடன்; மீளப் பெறுமாறு அமைச்சர் பந்துல அறிவுறுத்தல்

🕔 January 2, 2020

ஜித் பிரேமதாஸ வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு 150 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் 2018 – செப்டம்பர் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டம் திறந்து வைக்கப்படுவதற்கு முதல்நாள், ரூபவாஹினியில் மூன்று விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டன.

இந்த விளம்பரங்களை ஒளிபரப்புமாறு கூறியுள்ள சஜித் பிரேமதாஸ, ஊடக அமைச்சுக்கும், அப்போதைய ரூபவாஹினி தலைவருக்கும் அது குறித்து விளக்கமளித்துள்ளார்.

இந்த நிலையில் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் – அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு இது குறித்து எழுத்து மூலம் அறிவித்துள்ளன.

இதனையடுத்து மேற்படி தொகையை மீளப் பெற்றுக் கொள்வதற்குரிய நடவடிக்கையை எடுக்குமாறு, இதனையடுத்து ரூபவாஹினியின் தற்போதைய தலைவர் டொக்டர் நிஹால் ஜெயதிலகவை அமைச்சர் பந்துல பணித்துள்ளார்.

இந்த தகவலை ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்