ஒரு தரவு மையத்தின் கீழ், தனியாட்களின் தகவல்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

🕔 December 30, 2019

தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப் பத்திரங்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு ஆவணங்கள், மற்றும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் போன்ற அனைத்து தனிநபர் விபரத் தகவல்களையும் – ஒரு தரவு மையத்தின் கீழ் இணைக்கப்பட்டதாகச் சேகரித்து பதிவு செய்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் ஏற்படும் பெருமளவு தாமதங்களை அது வெகுவாகக் குறைப்பதுடன் அரசின் செயல்திறனையும் அது உறுதிசெய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.

“தவறாகவும் மற்றும் மோசடியாகவும் தனிப்பட்ட விபரங்கள் பிரயோகிக்கப்படுவதை இது தடுக்கும்” என்றும், “அதே சமயத்தில் இவ்வாறாக, அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருப்பது அவற்றின் வளர்ச்சிக்கு அடிப்படையான அதிக ஆக்கத்திறனை நாடு அடைய உதவும்” என்றும் அவர் இதன்போது விளக்கியுள்ளார்.

தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் தற்போது செயற்படுத்தப்படும் சில வேலைத்திட்டங்களை, அவை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக, அவற்றுக்கு நேரடியாகப் பொறுப்பாக உள்ள அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்