வடக்கு ஆளுநராக திருமதி சார்ல்ஸ் நியமனம்

🕔 December 30, 2019

டக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம். சார்ல்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.

சுகாதாரம், சுதேச மருத்துவத் துறை அமைச்சின் செயலாளராகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ள அவர், மட்டக்களப்பு மற்றும் வவுனியா மாவட்ட செயலாளராக நீண்டகாலம் சேவையாற்றியுள்ளார்.

இலங்கையில் இவருடன் மொத்தமாக மூன்று பெண்கள், தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்