தெ.கி.பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வரங்கு: 166 கட்டுரைகள் சமர்பணம்

🕔 December 18, 2019

பல்கலைக்கழக ஊடக பிரிவு –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாச்சார பீடம் ஏற்பாடு செய்திருந்த ‘ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மூலம் சமூகத்தை மேம்படுத்துதல்’ எனும் நோக்கத்தைக் கொண்ட சர்வதேச ஆய்வரங்கு இன்று பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கலை மற்றும் கலாச்சார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமையில், சிரேஷ்ட விரிவுரையாளரும் நிகழ்வின் இணைப்பாளருமான கலாநிதி எம். ஜப்பார் நெறிப்படுத்தலுடன் இடம்பெற்ற இன் நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

குறித்த ஆய்வரங்கில் முன்னிலை பேச்சாளராக அமெரிக்காவின் சாலிஸ்பரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ்.ஐ. கீதபொங்கலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இன்றைய அமர்வில் 166 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதும் 127 கட்டுரைகளே விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன 

நிகழ்வின் சிறப்பம்சமாக தொடக்க விழாவின் போது பல்கலைக்கழக பிரதான நூலகத்தின் மின் களஞ்சியத்தில் அனைத்து ஆய்வுக் கட்டுரைகளும் பதிவேற்றப்படடன.

இன்றய ஆரம்ப அமர்வுக்கு நூலகர், பீடாதிபதிகள், துறைகளின் தலைவர்கள் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் கட்டுரை சமர்ப்பித்தோர் நிருவாக அலுவலர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Comments