கோதுமை மாவுக்கு விலை அதிகரித்ததாக வெளியான செய்தி பொய்யானது: நிதியமைச்சர் தெரிவிப்பு

🕔 November 15, 2019

கோதுமை மாவுக்கு விலை அதிகரிக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மைகள் இல்ல என, நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை நியமித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கான குழு மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் ஒப்புதலின்றி கோதுமை மாவுக்கான விலை அதிகரிக்கப்பட மாட்டாது என்றும், தனது ட்விட்டர் பதிவில் நிதியமைச்சர் மங்கள சுட்டிக்காட்டியுள்ளார்.

கோதுமை மாவுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரண ஊடகம் பொய்யான செய்தியை பரப்பி விட்டதாகவும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கோதுமை மாவுக்கான விலை அதிகரிக்கப்பட்டதாக வெளியான செய்தியை பிறிமா நிறுவனம் மறுத்துள்ளதாக தெரண ஊடகம் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

நிதியமைச்சரின் ட்விட்டர் பதிவு

தொடர்பான செய்தி: கோதுமை மாவுக்கு விலையேறியது: கிலோ ஒன்றுக்கு 8.50 சதம் அதிகம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்