கோதுமை மாவுக்கு விலையேறியது: கிலோ ஒன்றுக்கு 8.50 சதம் அதிகம்

🕔 November 15, 2019

பிறிமா கோதுமை மாவுக்கான விலை கிலோ ஒன்றுக்கு 8.50 சதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, கோதுமை மா விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று நள்ளிரவு முதல், இந்த விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்போது அதிகரிக்கப்பட்ட விலை ஒரு கிலோகிராம் கோதுமை மாவுக்கு 104.50 சதம் ஆகும்.

இந்த நிலையில், பேக்கரி உரிமையாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களுக்கான விலையை அதிகரிக்க வேண்யேற்படும் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் கோதுமை மாவுக்கான விலை 5.50 சதத்தினால் அதிகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், சில நாட்களின் பின்னர் விவசாய அமைச்சு கேட்டுக் கொண்டமைக்கு இணங்க, கோதுமை நிறுவனங்கள் விலையை அதிகரிக்காமல் பழைய விலைக்கே கோதுமையை விற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்