ரெலோவின் தவிசாளர் சிவாஜிலிங்கம், கட்சியிலிருந்து விலகுவதாகக் கடிதம்

🕔 November 3, 2019

ரெலோ அமைப்பின் தவிசாளர் பதவியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி வேட்பாளருமான சிவாஜிலிங்கம் அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகத் தெரிவித்து, சிவாஜிலிங்கம் மீது ரொலோ ஒழுக்காற்று நடவடிக்க எடுத்து வருவதாகக் கூறப்படும் நிலையில், சிவாஜிலிங்கம், இந்த முடிவை எடுத்துள்ளார்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகுவதாக செயலாளர் சட்டத்தரணி என். சிறிகீந்தாவிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நேரடியாக கடிதமொன்றை சிவாஜிலிங்கம் கையளித்துள்ளார்.

Comments