சுதந்திரக் கட்சியிலிருந்து சந்திரிகாவை நீக்குவதற்கு முயற்சி
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்திரிகா குமாரதுங்க, புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை அடுத்தே, அவரை கட்சியில் இருந்து நீக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சுதந்திரக் கடசியின் காப்பாளராக சந்திரிக்கா பதவி வகித்து வருகின்றார்.
இந்த நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை இரவு கட்சியின் மத்திய குழுவின் அவசர கூட்டத்துக்கு, அழைப்பு விடுத்துள்ளார்
இந்தக் கூட்டத்தில், சந்திரிகா குமாரதுங்கவை கட்சியில் இருந்து நீக்குவதற்கு மைத்திரிபரிந்துரை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மறுபுறம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் இயக்கத்தின் மாநாடு சந்திரிகா குமாரதுங்க தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறவுள்ளது.