ஹிஸ்புல்லாவுக்கு ஒட்டகம், இஸ்லியாஸுக்கு பந்து: வருகிறது மிக நீளமான வாக்குச் சீட்டு

🕔 October 8, 2019

– புதிது செய்தியாளர் –

திர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கப்படும் வாக்குச் சீட்டானது, இதுவரையில் ஜனாதிபதி தேர்தலொன்றில் வழங்கப்பட்டவற்றில் மிக நீளம் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், 02 அடி 3 அங்குலம் நீளமானதுடையதாக, குறித்த வாக்குச் சீட்டு அமையும்.

இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 35 பேர் போட்டியிடுகின்றனர்.

அவர்களில் முஸ்லிம்கள் மூவரும், தமிழர்கள் இருவரும் அடங்குகின்றனர்.

சுயேட்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு ஒட்டகமும் ஏற்கனவே இரு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ள டொக்டர் இல்லியாஸுக்கு பந்தும் சின்னங்களாக வழங்கப்பட்டுள்ளன.

Comments