காணாமல் போன சாய்ந்தமருது மீனவர்கள், 20 நாட்களின் பின்னர் மீட்பு

🕔 October 7, 2019

– நூறுள் ஹுதா உமர் –

சாய்ந்தமருது மாளிகைகாடு மற்றும் காரைதீவு பிரதேசத்திலிருந்து கடற்றொழிலுக்குச் சென்றிருந்த நிலையில், கடந்த மாதம் 18ம் திகதி காணாமல் போன மீனவர்கள் திருகோணமலையிலிருந்து 154 கிலோ மீட்டர் தூரத்தில், படகுடன் இந்திய கடல் எல்லையில் மீட்கப்பட்டுள்ளனர் என அவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்தப் படகு கடற்றொழில் அமைச்சின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு செய்மதி ஊடாக இனங்காணப்பட்டதாகவும், தங்காலை – தெகுந்துர பிரதேசத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற சிங்கள மீனவர்கள் படகினையும் மீனவர்களையும் தற்போது கரைக்கு கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், அவர்களை ஊருக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை மீனவ சங்கங்கள் முன்னேடுத்து வருகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்