தாமரைக் கோபுரம்: சுவாரசிய தகவல்கள்; வேகமாக உயரும் மின்தூக்கிகள் இங்குதான் உள்ளன

🕔 September 16, 2019

கொழும்பில் இன்று திறந்து வைக்கப்பட்ட தாமரைக் கோபுரம் பற்றிய சுவாரசியமான தகவல்கள் சிலவற்றை வழங்குகின்றோம்.

01) இந்த கோபுரம் 08 மின்தூக்கிகளை கொண்டது. இவை நொடிக்கு 07 மீட்டர் உயரும். இலங்கையின் முதலாவது வேகமான மின்தூக்கி (லிஃப்ற்இவைதான்.

02) கோபுரத்தின் அடிப்பரப்பு 30,600 சதுர அடியாகும். சுமார் 1500 வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதி உள்ளது.

03) இந்த கோபுரத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது மாடிகள் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலி, ஒளிபரப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

04) இதன் 06வது மாடியில் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இது சுழலும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. உணவு உட்கொண்ட வண்ணமே கொழும்பு நகர் முழுவதையும் கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

05) உலகிலுள்ள உயரமான கோபுரங்களில் 19ஆவது இடத்திலுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்