தளவாய், சின்னத்தளவாய் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு, பிரதியமைச்சர் மஹ்ரூப், அரசாங்க அதிபரிடம் கோரிக்கை

🕔 August 27, 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் –

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தளவாய் சின்னத்தளவாய் மீள்குடியேற்றம், வனபாதுகாப்பு திணைக்களத்தின் நடவடிக்கைகளால் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், திருகோணமலை அரசாங்க அதிபரிடம் சுட்டிக்காட்டியதோடு, அதனைத் துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தார்.

கிண்ணியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம் பெற்ற போதும், தளவாய் சின்னத்தளவாய் மீள்குடியேற்றம் தொடர்பில் பிரதியமைச்சர் பேசினார்.

வனபாதுகாப்பு திணைக்களத்தின் தடையால் உரிய மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் வீட்டுத் திட்ட நிர்மாணங்களில் இடைஞ்சல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது விடயமாக மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஷ்பகுமாரவிடம் பிரதியமைச்சர் பேசியதோடு, மீள்குடியேற்றத்தையும் துரிதப்படுத்துமாடு வேண்டினார்.

இதன்போது கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். கனி, பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல். அனீஸ், பிரதேச வனபாதுகாப்பு உத்தியோகத்தர் அல்விஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டார்கள்.

Comments