மன்னார் முஸ்லிம்களை மீளக் குடியேற்றுமாறு வலியுறுத்தி, சம்மாந்துறையில் ஆர்ப்பாட்டம்

🕔 May 29, 2015

Protest (Sammant) - 02– எம்.சி. அன்சார் –

ன்னார் முசலிப் பிரதேசங்களிலிருந்து 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுமாறும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறும் கோரி, இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் – சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் கவனயீர்ப்புப் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

சம்மாந்துறை மக்கள் சார்பில் – சம்மாந்துறை ‘ஓசட்’ சமூக நல அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் – பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்கள்.

‘முஸ்லிம்களுக்கு எதிரான பொய்பிரச்சாரங்களை நிறுத்து’, ‘மறிச்சுக்கட்டி முஸ்லிம்களது மீள்குடியேற்றத்தை தடுக்காதே’, ‘அரசே வட புல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அநீதி இழைக்காதே’ உள்ளிட்ட வாசகங்களைக் கொண்ட  சுலோகங்களைத் தாங்கியவாறு, மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாகவுள்ள – இனவாத சக்திகளையும், போலிப்பிரச்சாரங்களையும் வன்மையாக கண்டிப்பதாக, ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டோர் கோஷமெழுப்பினர்.

இதன் பின்னர் – ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கவென தயாரிக்கப்பட்ட மகஜரொன்றினை, சம்மாந்துறை பிரதேச செயலாளர் சார்பில் ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்திருந்த கணக்காளர் எம். மஹ்ரூபிடம்  – ‘ஓசட்’ சமூக நல அமைப்பின் தலைவர் எம்.எம். சமீர் கையளித்தார். Protest (Sammant) - 03Protest (Sammant) - 01Protest (Sammant) - 04

Comments

புதிது பேஸ்புக் பக்கம்