நாவிதன்வெளி கண்ணகியம்மன் ஆலய பாற்குட பவனி

🕔 May 29, 2015

பாற்குட பவனி - நாவிதன்வெளி - 02– நர்சயன் –

நாவிதன்வெளி 15 ஆம் கிராம கண்ணகியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டுஇ நேற்று வியாழக்கிழமை  பாற்குடப்பவனி நடைபெற்றது.நாவிதன்வெளி கண்ணகியம்மன் ஆலயத்தின் பிரதம பூசகர் எஸ். வேந்திரங் குருக்களின் வழிகாட்டலில்இ வேப்பையடிப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பித்த மேற்படி பாற்குடப் பவனியானது – கண்ணகியம்மன் ஆலயத்தினைச் சென்றடைந்தது.

கடந்த செவ்வாய்கிழமை 26 ஆம் திகதி – கொடியேற்றத்துடன் ஆரம்பித்த மேற்படி வருடாந்த உற்சவமானதுஇ 07 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.

இவ் வருடாந்த உற்சவத்தில்இ எதிர்வரும் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கன்னிக்கால் வெட்டும் நிகழ்வு இடம்பெறும்.

திங்கட்கிழமை 01 ஆம் திகதி – திருக்குளிர்தியுடன் வருடாந்த உற்சவம் நிறைவு பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்