இந்தோனேசியாவில் சுனாமி: 43 பேர் மரணம்

🕔 December 23, 2018

ந்தோனேசியாவில் நேற்று சனிக்கிழமை இரவு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் காரணமாக ஆகக்குறைந்நது 43 பேர் இறந்திருக்கலாம் என்று இந்தோனேசியாவின் அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளதாக சி.என்.என். செய்திச் சேவை சற்று முன்னர் (இலங்கை நேரப்படி ஞாயிறு காலை 7.00 மணி) செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இதன்போது 582 பேருக்குக் குறையாதோர் காயமடைந்திருக்கலாம் எனவும் சி.என்.என். தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் பாண்டெக்லாங், செராங் மற்றும் லம்பங் தெற்குப் பகுதிகளில் சுனாமி தாக்கியுள்ளது.

இதேவேளை, சுனாமித் தாக்கம் காரணமாக இருவர் காணாமல் போயுள்ளதாகவும், பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் முன்னதாக தகவல் தெரிவித்திருந்தார்.

உள்ளுர் நேரப்படி நேற்றிரவு 09.03 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 24 நிமிடங்களின் பின்னர் சுனாமி ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்