ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு: நாளை காத்தான்குடியில்

🕔 December 22, 2018

க்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு, நாளை ஞாயிற்றுக்கிழமை 10.00 மணிக்கு காத்தான்குடி பீச்வே ஹோட்டலில் இடம்பெறவுள்ளதாக, அந்தக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜியார் தெரிவித்தார்.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் பேராளர் மாநாட்டில், மூத்த அரசியல்வாதியும் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்.ரி. ஹசனலியும் கலந்து கொள்கிறார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், தனது தனிப்பட்ட தேவைகளுக்காக முஸ்லிம் காங்கிரசின் யாப்பினை சர்வதிகாரமான முறையில் மாற்றம் செய்தமையினை எதிர்த்து, முஸ்லிம் காங்கிரசிலிருந்து வெளியியேறிய முக்கியஸ்தர்களின் கடின உழைப்புடன் கட்டியெழுப்பப்பட்டுள்ள ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு, கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

“முஸ்லிம் தேசியத்தை நோக்கிய பயணத்தைத் தொடர்வோம்” எனும் லட்சியக் கோஷசத்துடன், முதல் முயற்சியாக கடந்த உள்ளுராட்சித் தேர்தலை எதிர்கொண்ட ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புக்கு குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள் கிடைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்