முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு, வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

🕔 September 19, 2015

Hatton police - 03
– க.கிஷாந்தன் –

ட்டன் பிரதேச முச்சக்கரவண்டி சாரதிகள் மத்தியில், வீதி விபத்துக்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுவொன்று ஹட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் அனுசரணையில், இலங்கை பொலிஸ் தலைமையக திணைக்களத்தின் போக்குவரத்துப்பிரிவு, இவ் விழிப்புணர்வு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது விபத்துக்களை எவ்வாறு தவிர்த்துக்கொள்வது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும், சரியான முறையில் வீதி சமிக்ஞைகளை கடைப்பிடித்தல் மற்றும் தவறான முறைகளில் வீதி சமிக்ஞைகளை கடைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, பொகவந்தலாவ, கினிகத்தேன, நல்லதண்ணி, நோட்டன்பிரிட்ஜ் மற்றும் வட்டவளை பிரதேசங்களிலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகள் உட்பட, நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.Hatton police - 05Hatton police - 04Hatton police - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்