மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி; ‘மொட்டு’ம், ‘கை’யும் இணைகின்றன

🕔 December 8, 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிவை இணைந்து, புதிய கூட்டணி ஒன்றினை உருவாக்கவுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் புதிய கூட்டணியானது மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்  செயற்படவுள்ளதாக, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments