நாடாளுமன்றம் கலைப்பு: சர்வதேச நாடுகள் கண்டனம்

🕔 November 10, 2018

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அரசியல் நெருக்கடியை மேலும் ஆழமாக்கும் செய்திகளால், தாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக, ‘ட்விட்டர்’ பதிவு ஒன்றின் மூலம் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜனநாயக கட்டமைப்பின் கீழ் இலங்கையில் நீதியான நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புவதாகவும் அந்தப் பதிவில், அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இதேபோல் பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மார்க் பீல்ட் , இலங்கை அரசியல் நிலைமை குறித்து ஆழந்த கவலை வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் , ஜனநாயக கோட்பாடுகளுக்கு அமைய, அனைத்து தரப்பினரும் செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் ஸ்திரமற்ற அரசியல் நிலைமை மற்றும் நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள கனடா, இந்த நிலைமை ஜனநாயக கோட்பாடுகளையும் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறலை பாதித்து விடக் கூடாதென வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்டதை அடுத்து, இவ்வாறான கண்டனங்கள் எழுந்துள்ளன.

விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ள ஜனாதிபதி, ஜனவரி 05ஆம் திகதி, பொதுத் தேர்தலுக்கு நாட் குறித்துள்ளார்.

மேலும்,   வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் நவம்பர் 19 ம் திகதியில் ஆரம்பமாகி 26 ம் திகதி வரை நடைபெறும் எனவும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்