நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சராக ஹிஸ்புல்லா நியமனம்; ஹக்கீமிடமிருந்த அமைச்சு கிழக்கு வசம்

🕔 November 9, 2018

கர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தில் கடந்த 01ஆம் திகதி பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்ட நிலையிலேயே, தற்போது அவர் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கலாநிதி ஹிஸ்புல்லா தற்போது பொறுப்பேற்றுள்ள நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினை கடந்த அரசாங்கத்தில் மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments