அரசாங்கத்தை மாற்றியமை தொடர்பில், சட்ட நிலைப்பாட்டினை கூற முடியாது: சட்ட மா அதிபர்

🕔 October 31, 2018

பிரதமர் பதவி மற்றும் அரசாங்கத்தை மாற்றியமை தொடர்பில், சட்டரீதியான நிலைப்பாட்டை அறிவிக்க முடியாதுள்ளதாக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.

கடிதமொன்றின் ஊடாக இந்த தகவலை அவர் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில், சட்டரீதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு, கடந்த 27ஆம் திகதி சட்டமா அதிபருக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கடிதம் அனுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள சட்டமா அதிபர்; அரசியலமைப்பின் கீழ் சட்டமா அதிபர் என்ற ரீதியில்,  தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை குறித்து அறிவிப்பை விடுப்பது பொருத்தமற்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்