அலறி மாளிகையை 4.00 மணிக்கு முன்னர் ஒப்படைக்கவும்: அரசாங்கம் உத்தரவு

🕔 October 27, 2018

லறி மாளிகையை ஒப்படைக்குமாறு ஐக்கிய தேசிய கட்சிக்கு அரசாங்கம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், இன்று சனிக்கிழமை 4.00 மணிக்குள், அலறி மாளிகை ஒப்படைக்கப்பட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமையை அடுத்து, பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலறி மாளிகையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்தும் தங்கியிருக்க அனுமதி இல்லை என்றும், லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலும், அலறி மாளிகையிலேயே தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்