தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு

🕔 October 25, 2018

– மப்றூக் –

கைது செய்யப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்  15 பேரையும், அடுத்த மாதம் 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தை கடந்த இரு வார காலமாக ஆக்கிரமித்திருந்த, தகவல் தொழில்நுட்ப பீட மாணவர்கள் 15 பேரை, அக்கரைப்பற்று பொலிஸார் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்தனர்.

இதனையடுத்து, குறித்த மாணவர்களை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே, அவர்கள் அனைவரையும் அடுத்த மாதம் 01ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

தொடர்பான செய்திகள்:

01) தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; இரண்டு வார சர்ச்சை முடிவுக்கு வந்தது

02) தெ.கி.பல்கலைக்கழகம்: ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடத்தின் மின்சாரம், நீர் துண்டிப்பு; உள்நுழைந்தனர் பொலிஸார்: பேச்சுக்கு மாணவர்கள் இணக்கம்

03) தென்கிழக்கு பல்கலைக்கழகம்: மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது

Comments