ஜனாதிபதியை கொல்வதற்கு சதி: நாலக சில்வாவிடம் 09 மணி நேரம் விசாரணை

🕔 October 18, 2018

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவிடம் இன்று வியாழக்கிழமை 09 மணி நேரம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில், நாளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு குற்றப் நாலக சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் பிர­சன்ன அல்விஸ்  ஆகியோரை கொலை செய்ய சதித் செய்யும் விதமாக தொலை­பே­சியில் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தாக கூறப்­படும் விவ­காரம் தொடர்பில் விசா­ர­ணை­க­ளுக்­காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நால­கவா இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று ஆஜராகியிருந்தார்.

இதன்போது அவரிடம் 09 மணி நேரம் விசாரணை நடத்தியதோடு, நாளைய தினமும் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தொடர்பான செய்தி: நாலக சில்வாவை சேவையிலிருந்து இடைநிறுத்த, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி

Comments