கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளராக நௌபீஸ் நியமனம்

🕔 October 11, 2018
– ஹஸ்பர் ஏ ஹலீம் –

கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக நூர்தீன் முஹம்மட் நௌபீஸ்  நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹிதபோகொல்லாகக, நேற்று புதன் கிழமை  திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து இந்த நியமனத்தை வழங்கினார்.

ஏறாவூறை பிறப்பிடமாகக் கொண்ட முஹம்மட் நௌபீஸ் – இலங்கை நிருவாக சேவையை தரத்தைக் கொண்டவராவார்.

இவர், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவிச் செயலாளர், கிராமிய கைத்தொழில் உற்பத்தி திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் மற்றும் கிண்ணியா நகர சபையின் செயலாளர் போன்ற பதவிகளையும் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments