பிரதி மேயர் அஸ்மியின் பொடுபோக்கு: 06 கூட்டங்களில் 03க்கு கல்தா

🕔 September 28, 2018

– அஹமட் –

க்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தல் நடைபெற்ற பின்னர் இடம்பெற்ற 06 மாதாந்தக் கூட்டங்களில், 03 கூட்டங்களுக்கு அச் சபையின் தேசிய காங்கிரசைச் சேர்ந்த பிரதி மேயர் அஸ்மி அப்துல் கபூர், தொடர்ச்சியாக அறிவித்தலின்றி வருகை தரவில்லை எனத் தெரியவருகிறது.

இறுதியாக நடைபெற்ற மாதாந்தக் கூட்டத்துக்கும்,  அக்கூட்டம் நிறைவடைவதற்கு அரை மணி நேரம் இருக்கத்தக்கதாகவே அவர் வருகை தந்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

அக்கரைப்பற்று மாநகர சபையின் 3, 4 மற்றும் 5ஆவது கூட்டங்களுக்கே, அஸ்மி அப்துல் கபூர் அறிவித்தலின்றி வருகை தரவில்லை.

இவற்றில் மூன்றாவது கூட்டத்தில் கலந்து கொள்ளாமையின் நிமித்தம், அவர் வைத்தியச் சான்றிதழ் சமர்ப்பித்திருந்த போதும், 4 மற்றும் 5 ஆவது கூட்டங்களில் கலந்து கொள்ளாமை தொடர்பில், எதுவித வைத்தியச் சான்றிதழும் சமர்ப்பிக்கவில்லை.

இந்த நிலையில், பிரதி மேயர் அஸ்மியின் தொடர்ச்சியான வரவின்மை தொடர்பில், அவர் வைத்தியச் சான்றிதழ் சமர்ப்பிப்பதாயின், அரசாங்க வைத்தியசாலைகளில் வழங்கப்பட்ட வைத்தியச் சான்றிதழை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று, அச் சபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.எம். சபீஸ், சபைக் கூட்டத்தில் வைத்து கூறியமை குறிப்பிடத்தக்கது.

மக்களின் பிரச்சினைகளுக்கு உள்ளுராட்சி சபைகள் ஊடாக தீர்வுகளைப் பெற்றுத் தருவேன் என வாக்குறுதி வழங்கி, அதன் மூலம் வாக்குகளைப் பெற்று – வெற்றி பெறுவோர், அதன் பின்னர் – சபைக் கூட்டங்களுக்கு சமூகமளிப்பதில் இவ்வாறு பொடுபோக்குடன் நடந்து கொள்கின்றமையும், ஒருவகையான அரசியல் மோசடியாகும் என்று, இதுகுறித்து தகவல் தந்த, மக்கள் பிரதிநிதியொருவர்தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்