சென்னையிலிருந்து கொழும்பை, புலிகள் தாக்க திட்டமிட்டிருந்தனரா; கேள்விப் படவில்லை என்கிறார் கோட்டா

🕔 September 29, 2018

சென்னையிலிருந்து விமானங்கள் மூலம் கொழும்பு நகர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என, இதுவரையில் தான் கேள்விப்படவில்லை என  முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் இறுதி வாரங்களில் சென்னையிலிருந்து கொழும்பின் மீது  விடுதலைப் புலிகள் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன  நியுயோர்க்கில் வைத்து கூறியிருந்தார்.

எனினும்  தனக்கும் பாதுகாப்பு தரப்புக்கும் இது  புதிய செய்தி என்று, கோட்டாபய ராஜபக்ஷ பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.

“சிறிசேனவின் தகவல் எனக்கு புதியது. நானோ அல்லது உலக நாடுகளோ இவ்வாறான ஒரு தகவலை அவ்வேளை பெற்றிருக்கவில்லை” எனவும் கோட்டா கூறியுள்ளார்.

“நான் அவ்வேளை இலங்கையிலேயே இருந்தேன். நான் வேறு எங்கும் செல்லவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரசியல் தலைமை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என, ஜனாதிபதி தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள கோட்டா, யுத்த குற்றங்களில் இருந்து  நாட்டை விடுவிக்கவேண்டியது ஜனாதிபதியின் பொறுப்பு எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்