தொடரும் வன்மம்; உதுமாலெப்பையை ‘வெற்றுக் காகிதம்’ என்கிறாரா அஸ்மி அப்துல் கபூர்?

🕔 September 22, 2018

தேசிய காங்கிரஸுடன் எம்.எஸ். உதுமாலெப்பைக்கு பிளவு ஏற்படுவதற்கு பிரதான காரணமானவர் என, உதுமாலெப்பை தரப்பினரால் விமர்சிக்கப்படும் அக்கரைப்பற்று மாநகரசபை பிரதி மேயரும், தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான அஸ்மி அப்துல் கபூர், தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இட்டுள்ள பதிவொன்று, மீண்டும் சர்ச்சையினைத் தோற்றுவித்துள்ளது.

கவிஞர் பா. விஜய் எழுதிய சில வரிகளை, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் அஸ்மி அப்துல் கபூர், தற்போது பதிவிட்டுள்ளமையானது, உதுமாலெப்பையை குறி வைத்தது போல் உள்ளதாக, கூறப்படுகிறது.

தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் படத்துடன்;

பறவையும் பறக்கும்
காகிதமும் பறக்கும்

காற்று நின்றால்தான் தெரியும்
பறவை எது, காகிதம் எது என.
– பா. விஜய் –

என்று, அஸ்மி அப்துல் கபூர், அந்த பதிவ இட்டுள்ளார்.

இந்த நிலையில், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவை ‘பறவை’ என்றும், உதுமாலெப்பையை ‘காகிதம்’ என்றும் இங்கு அஸ்மி கூற முயற்சித்துள்ளாரா என்கிற கேள்வி, இதனை வாசிப்பவர்களிடத்தில் எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

அதேபோன்று, ‘காற்று நின்றால்தான் தெரியும் – பறவை எது, காகிதம் எது என’ என்கிற வரிகளின் மூலம், ‘தேசிய காங்கிரசிலிருந்து விலகினால்தான், உதுமாலெப்பை, காகிதம் என்பது புரிய வரும்’ என்று, வன்மத்துடன் அஸ்மி சுட்டிக்காட்ட முற்படுகின்றாரா எனவும், அதனைப் படிப்பவர்களுக்கு எண்ணவும் தோன்றுகிறது.

ஆக, உதுமாலெப்பைக்கு எதிரான தனது எழுத்துப் போரினை அஸ்மி, நிறுத்தவதாக இல்லை போலவே தெரிகிறது.

இதற்கு, உதுமாலெப்பை தரப்பினரின் பதில் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்