எனக்கு 17, கோட்டாவுக்கு 25: பாதுகாப்பு தொடர்பில் சரத் பொன்சேகா விசனம்
பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தகுதி வாய்ந்தவர் இல்லை என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
களனியின் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டபோதே போதே அவர் இதனைக் கூறினார்.
“கோட்டபய ராஜபக்ஷ தற்போது அரசாங்க உத்தியோக்கதர் ஒருவர் இல்லை. அவர் மக்களுக்கு தற்போது எந்த ஒரு சேவையையும் செய்யவுமில்லை” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“எனது பாதுகாப்புக்காக 17 பொலிஸார் வழங்கப்பட்டுள்ளனர். ஆனால் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இதுவரையில் 25 பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் கூறினார்.
இதேவேளை பொலிஸ் மா அதிபருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நியாயமான விசாரணை ஒன்றை மேற்கொண்டு, உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.