பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதென்றாலும், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம்

🕔 August 26, 2018

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்தவேண்டுமாயின், நடைமுறையில் உள்ள சட்டம் மீள திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுமாயின், அது குறித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு தாம் தயார் என, ஒன்றிணைந்த எதிரணி கூறியுள்ளது.

மேலும், மாகாண சபைகள் எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததை அடுத்து, அதற்குப் பொறுப்பான அமைச்சர் பதவி விலகியிருக்க வேண்டும் என்றும் ஒன்றிணைந்த எதிரணி குறிப்பிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்