எல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவு கிடைக்காமல் போனால், பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்

🕔 August 10, 2018

தொகுதிகளை மீள்வரையறை செய்யும் – எல்லை நிர்ணய அறிக்கையை நாடாளுமன்றில் நிறை­வேற்றுவதற்கு, மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை கிடைக்காமல் போகுமாயின், பழைய முறை­மையின் கீழ், மாகாண சபைத் தேர்­தலை நடத்த நேரிடும் என தீர்மானிக்கப்படுள்ளது.

பிர­தமர் ரணில் தலை­மையில் நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சித்  தலைவர்கள் கூட்­டத்தில் இந்த தீர்­மா­னம் எட்டப்பட்டது.

மாகாண சபை தேர்தலை, எந்த முறைமையில் நடத்துவது என்பது தொடர்­பாக நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்­க­ப்பாடு எட்­டப்­ப­ட­வில்லை. அதன் காரணமாக,  புதிய முறைமையில் தேர்தலை நடத்துவதற்காக தயாரிக்கப்பட்ட எல்லை நிர்­ணய அறிக்கையை நாடாளுமன்றில் விவா­தத்­துக்கு எடுப்­ப­தற்கு தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், குறித்த அறிக்­கையை நிறை­வேற்றுவதற்கு நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்­பான்மை அவ­சி­ய­மாகும். குறித்த பெரும்­பான்மை கிடைக்காமல் போகுமாயின், தேர்தலை பழைய முறை­மையின் கீழ்  நடத்த நேரிடும் என தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அதேவேளை, எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான விவா­தத்­துக்­கான திக­தியை அறி­விக்­கு­மாறும்,பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபா­நா­ய­க­ரி­டம் கோரி­யுள்ளார்.

நேற்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, தேர்தல் முறைமை தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. பழைய முறை­மையின் கீழ் தேர்­தலை நடத்­த­வேண்டும் என சிறு­பான்மை கட்­சிகள் வலி­யு­றுத்­தின. என்­றாலும் புதிய முறை­மையின் கீழ் தேர்தல் நடத்த வேண்டும் என சுதந்­திரக் கட்­சியும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் வலியுறுத்தின.

ஆயினும், ஐக்­கிய தேசியக் கட்­சியும் கூட்டு எதிர்க்­கட்­சியும் புதிய முறை­மையின் கீழ் இல்­லா­விடின் பழைய முறை­மை­யி­லா­வது தேர்­தலை உடனடியாக நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தன.

Comments