பாகிஸ்தான்: தேர்தல் சாவடியருகில் குண்டு வெடிப்பு; 28 பேர் பலி

🕔 July 25, 2018

பாகிஸ்தானில் இன்று புதன்கிழமை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அங்கு இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 28 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் குவட்டாவில் ஒரு வாக்குச்சாவடி அருகே இந்தக் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, தற்கொலைக் குண்டுத்தாக்குதலே இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தெற்காசிய நாடான பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 200 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். அணு ஆயுத வல்லமை கொண்ட பாகிஸ்தான் இந்தியாவுடன் போட்டிபோடும் நாடாகும்.

மேலும், உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்