சுஜப் எம். காசிம் எழுதிய நூல் அறிமுக விழா; அக்கரைப்பற்றில் சிறப்பாக நடந்தேறியது

🕔 July 24, 2018
– பாறுக் ஷிஹான்-

சி
ரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம் காசிம் எழுதிய  ‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ எனும்  நூலின் அறிமுக விழா, நேற்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று  ரி.எப்.சி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மீன்பிடித்துறை கடல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி  பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதிகளாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம்.ரி ஹசன் அலி,  நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப், கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் மற்றும் முன்னாள் மாகாணஅமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. தாஹிர் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளருமான எம்.ஏ. அன்ஸில் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கேற்றதுடன் நூலின் முதற் பிரதியை தொழில் அதிபர் எம்.ஜே.எம். ஜெரின் பெற்றுக்கொண்டார்.

கவிஞர் ரி.எல். ஜெளபர்கான் நூலுக்கான நூலின் அறிமுக உரையை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் மூத்த உலமாக்கள் கல்விமான்கள் வர்த்தக பிரமுகர்கள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஊடக வியலாளர்கள் பங்கேற்றனர்.

இதன் போது நூலாசிரியர் – அவரின் எழுத்துப் பணிக்காக, பாராட்டிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது,

Comments

புதிது பேஸ்புக் பக்கம்