உகண்டாவில் வட்ஸ்அப், ஃபேஸ்புக் பயன்படுத்த வரி

🕔 July 8, 2018

கண்டாவில் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்றவற்றினைப் பயன்படுத்த வேண்டுமாயின் அங்கு வரி செலுத்த வேண்டியுள்ளது.

செய்திப் பகிர்வு ‘அப்’ மற்றும் சமூக வலைத்தளங்களில் ‘வெட்டிப் பேச்சை’, அந்த நாட்டு ஜனாதிபதி  யுவரி முஸவனி விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவற்றினூடாக வம்புகள் வளர்வதாகவும், அதன் காரணமாக உற்பத்திகள் பாதிக்கப்படுவதாகவும் அந்த நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளார்.

குரல் மற்றும் செய்தி ‘அப்’களைப் பயன்படுத்த, பயனர்கள் நாளொன்றுக்கு 0.05 டொலர் அங்கு செலுத்த வேண்டும்.

ஐந்தில் ஒருவர் வறுமையில் வாடும் உகண்டாவில், இந்த வரியானது பலரையும் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

ஆனாலும் மக்கள் மத்தியில் இதற்கு கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதனையடுத்து, வரி செலுத்துவதிலிருந்து தப்பிப்பதற்காக ‘புரக்ஸி’ ஊடாக, இவற்றினை மக்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

எவ்வாாயினும், மேற்படி வரியினூடாக, 100 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

இன்னொருபுறம், சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க, இந்த வரி விதிப்பு உதவும் என்கிற கருத்தும் உள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்