தென்னாபிரிக்காவுடனான கிறிக்கட் தொடர்; எழுந்து நிற்குமா இலங்கை அணி?

🕔 July 8, 2018

– எஸ்.ஏ. அப்துர் ரஹீம் –

டந்த நான்கு, ஐந்து வருடங்களாக பாரிய பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, இம்மாதம் நடைபெறவுள்ள தென்னாபிரிக்காவுடனான தொடரில் வெற்றி பெற்று இலங்கை அணி ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் என்கிற அதீத எதிர்பாப்பில் ரசிகர்கள் உள்னர்.

இப்போட்டி தொடர் இம்மாதம் 12ம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் மாதம் 14ஆம்  திகதி வரை நடைபெறவுள்ளன. இவற்றில் இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு – இருபதுக்கு இருபது போட்டி ஆகியவை அடங்குகின்றன.

அதேபோன்று ஐ.சி.சி தரவரிசை பட்டியலின் படி, டெஸ்ட் தரவரிசையில் இலங்கை அணி ஆறாம் இடத்தையும் ஒருநாள் தர வரிசையில் எட்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. மேலும், இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை ஒன்பதாவது இடத்தில் காணப்படுகிறது.

இத்தொடரில் இலங்கை அணி வெற்றி பெறும் பட்சத்தில், தரவரிசையில் முன்னேற வாய்ப்புள்ளது எனவும், வரும் ஆறு மாதங்களுக்குள் இலங்கை அணி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் எனவும் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் ஹத்றுசிங்க நம்பிக்கை தெரிவித்திருந்தமைஎன்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்