கிளைமோர் வெடிபொருட்கள், புலிகளின் சீருடை மற்றும் கொடி ஆகியவற்றுடன் பயணித்தவர்கள் கைது

🕔 June 22, 2018

கிளைமோர் வெடிகுண்டுகள், புலிகள் அமைப்பின் ராணுவச் சீருடை மற்றும் புலிகளின் கொடிகள் ஆகியவற்றுடன் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்த இருவரை, முல்லைத்தீவு – ஒட்டிசுட்டான் பகுதியில் பொலிஸார் கைது செய்தனர்.

இதன்போது மேற்படி பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் மேற்படி பொருட்கள் கொண்டு செல்லப்பட்டபோது, பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில் சந்தேக நபர்கள் சிக்கினர்.

இதன்போது ஒருவர் தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரியவருகிறது. எனினும், ஏனைய இரு சந்தேக நபர்களையும் கைது செய்த பொலிஸார், முஸ்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் அவர்களை ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மேற்படி வெடிபொருட்கள் என்ன நோக்கத்துக்காகக் கொண்டு செல்லப்பட்டது என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Comments